Santhanam : சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலையில் தற்போது இறங்கியுள்ள சந்தானம் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்த சூழலில் சமீபத்தில் தேவயானியின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது. அதாவது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜ்குமார் நடித்திருப்பார். அதில் சந்தானம் இவரை கிண்டல் அடித்திருந்தார்.
இது குறித்து பேசிய தேவயானி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார் என்று எனக்கு தெரியவில்லை. மேலும் எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அந்தப் படத்தை நான் பார்க்கவே இல்லை, சில காட்சிகள் மட்டும் பார்த்திருக்கிறேன்.
தேவயானிக்கு பதிலடி கொடுத்த சந்தானம்
அது தனக்கு மிகவும் வருத்தம் அளித்ததாக தேவயானி கூறியிருந்தார். இதில் தேவயானிக்கு பதிலடி கொடுக்கும் படி சந்தானம் சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது ராஜ்குமார் சாரிடம் ஸ்கிரிப்ட்டை சொல்லும் போதே பவர்ஸ்டார் போன்ற கேரக்டர் தான் என்று கூறிவிட்டோம்.
அதுவும் முழு ஸ்கிரிப்ட்டையும் அவரிடம் கொடுத்தோம். ஏனென்றால் நடிகர்கள் பாதியில் அதை செய்ய முடியாது, இதை செய்ய முடியாது என்று கூறுவார்கள். ஆகையால் முதலிலேயே இதெல்லாம் இருக்கும் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டோம்.
மேலும் ராஜ்குமார் சார் தான் முதலில் என்னை கலாய்த்து இருப்பார். அதன் பிறகு அவரை கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. படத்திற்கு ஒரு கேரக்டர் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்ய முடியும் என்று சந்தானம் கூறியிருக்கிறார்.