ட்ரெய்லரை வைத்து பல கோடிக்கு பிளான் போட்ட அண்ணாச்சி.. தலையில் துண்டை போட்ட ‘தி லெஜன்ட்’

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்களை தொடர்ந்து தற்போது படத்திலும் நடித்துள்ளார். உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜன்ட் என்ற படத்தில் அண்ணாச்சி நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.

இந்நிலையில் தி லெஜன்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது பல பிரபல நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி இருந்தது. இது கிட்டத்தட்ட 26 மில்லியன் பார்வையாளர்கள் கடந்த ட்ரெண்டானது.

ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை படத்தின் டிரெய்லரை விட அண்ணாச்சி படத்தின் டிரைலர் மூன்றே நாளில் இந்த சாதனையை படைத்துள்ளது. இதை அறிந்த அண்ணாச்சி பெரிய நடிகர்களின் படங்களை விட நமக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

இதனால் அண்ணாச்சி தன்னுடைய படத்திற்கு நல்ல மார்க்கெட் இருப்பதாக நினைத்துக்கொண்டு படத்தை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இதை அறிந்த தியேட்டர் உரிமையாளர்கள் ட்ரெய்லரில் மூன்று, நான்கு காட்சிகள் மட்டுமே நன்றாக எடுத்துவிடுவீர்கள்.

அதை நம்பி எல்லாம் படத்தை வாங்க முடியாது. படத்தில் அவருடைய நடிப்பு எந்த அளவிற்கு நன்றாக இருப்பதைப் பொறுத்து தான் படம் வெற்றி பெறும். அதனால் நீங்கள் கேட்கும் தொகைக்கு படத்தை வாங்க முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கே கோடிக்கணக்கில் செலவு செய்து அண்ணாச்சி போட்ட முதலை எப்படி எடுப்பது என்ற கவலையில் உள்ளாராம். மேலும் முதல் படத்திலேயே இந்த நிலைமையா என்ற குழப்பத்திலும் அண்ணாச்சி உள்ளார்.