ரிலீஸ் தேதியுடன் வந்த சார்பட்டா படத்தின் வெறித்தனமான போஸ்டர்.. அமேசானுக்கு ஆடி ஆஃபர் தான்!

மகாமுனி திரைப் படத்திற்கு பிறகு ஆர்யா நடிக்கும் சுமாரான படங்கள் கூட சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் அடுத்ததாக மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.

பா ரஞ்சித் மற்றும் ஆர்யா கூட்டணியில் பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

தியேட்டரில் வெளியானால் கண்டிப்பாக ஆர்யாவின் மார்க்கெட் பல மடங்கு உயரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தியேட்டர்கள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்த படத்தை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டது. இந்நிலையில் ரிலீஸ் தேதியுடன் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது சார்பட்டா பரம்பரை படம். இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பா ரஞ்சித் இன் கனவு படம் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

sarpatta-amazon-premire-date-announced
sarpatta-amazon-premire-date-announced

ஆர்யாவும் இந்த படம் தனக்கு ஒரு நல்ல மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் இந்த படம் தற்போது நேரடி ஓடிடி வெளியீடாக மாறியுள்ளது கொஞ்சம் வருத்தம்தான்.