Actor and Director Sasikumar: நேரமும் காலமும் நல்லா இருந்தால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் சசிகுமாரை சொல்லலாம். முதலில் இயக்குனராக சுப்ரமணியபுரம் படத்தில் எண்டரி கொடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். இப்படம் மிகப்பெரிய கேங்ஸ்டர் படமாக வெற்றி பெற்று, இந்த மாதிரி ஒரு படத்தை யாராலும் கொடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப பெயர் வாங்கி விட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ஈசன் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பின் இயக்குனர் பாணியில் இருந்து விலகி நடிகராக மாறிவிட்டார். இவர் நடித்த நாடோடிகள் படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்த எந்த படமும் சொல்லும் படியாக இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.
அதிலும் இவரெல்லாம் ஹீரோவாக சான்சே இல்லை என்று சொன்னவர்களுக்கு மத்தியில் ஹீரோவாக நிலைத்து நின்று அதில் வெற்றி பெற்று வருகிறார். அப்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தியேட்டரில் மட்டும் இல்லாமல் ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், நா நா, நந்தன் ஆகிய படங்களின் நடித்துக் கொண்டு வருகிறார். அதிலும் நந்தன் படம் அரசியல் சார்ந்த படமாகவும், அதனால் பல கருத்துக்களை முன்வைத்து நடித்து வருகிறார் என்பதால் பலரும் ஆவலாக இப்படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் அயோத்தி படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை ஒட்டி பெருத்த லாபத்தையும் பார்த்திருக்கிறார். அந்த வகையில் தற்போது 4.5 கோடிக்கும் அதிகமான சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த கார் மாடலின் பெயர் ஆஸ்டன் மார்ட்டின். இந்த கார் பக்கத்தில் ஸ்டைலிஷ் ஆக போஸ் கொடுத்து ஒரு போட்டோவை எடுத்து இவருடைய ட்விட்டர் பக்கத்தில் Me & #AstonMartin என கேப்ஷன் போட்டு வெளியிட்டு இருக்கிறார்.
சசிகுமார் ஆஸ்டன் மார்ட்டின் கார் பக்கத்தில் ஸ்டைலிஷ் ஸ்டில்

இந்தாண்டு இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். நீண்ட காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவர் அயோத்தி படம் மூலமாக கம் பேக் கொடுத்து ரசிகர்களை ஆனந்தப்படுத்தி இருக்கிறார். இதற்காக இவருடைய ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.