Sasikumar-Tourist Family: புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.
இத்தனைக்கும் கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் வெளிவந்த ரெட்ரோ படத்துடன் இப்படம் மோதியது. அதனாலேயே பெரிதும் கவனிக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி உண்மையிலேயே பீல் குட் படம் என்பதை மறுக்க முடியாது.
திரை பிரபலங்கள் அனைவரும் பாராட்டிய நிலையில் பட குழுவினர் தேங்க்ஸ் மீட் நடத்தி தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய சசிகுமார் டாப் ஹீரோக்களுக்கு குட்டு வைத்துள்ளார்.
டாப் ஹீரோக்களுக்கு குட்டு வைத்த சசிகுமார்
அதாவது ஒரு படம் வெற்றி அடைந்தாலே உடனே ஹீரோக்கள் செய்யும் முதல் வேலை சம்பளத்தை ஏற்றுவது தான். ஆனால் சசிகுமார், இந்த படம் ஹிட் ஆயிடுச்சு அதனால் சம்பளம் ஏத்திடுவீங்களா என கேட்கிறார்கள்.
ஆனால் என்னோட சம்பளம் அதே தான். உயர்த்த மாட்டேன். மத்தவங்களோட கஷ்டம் எனக்கு தெரியும். டூரிஸ்ட் ஃபேமிலி முதல் நாள் வசூல் இரண்டரை கோடி.
என்னுடைய முந்தைய படங்களின் மொத்த வசூலை பார்த்தாலே அவ்வளவுதான் இருக்கும். எப்போதுமே தோல்வியை ஒத்துக்கணும். நான் அதை ஒவ்வொரு முறையும் செய்து இருக்கிறேன்.
நிறைய முறை தோல்வி அடைந்து இருக்கிறேன். அதனால் சம்பளத்தை உயர்த்த மாட்டேன். அப்படி செய்தால் படத்தின் பட்ஜெட் உயரும். பல சிக்கல் இருக்கிறது. அதனால் அதை செய்ய மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார்.
இது டாப் ஹீரோக்களுக்கு கொடுத்த அடியாகத்தான் பார்க்கப்படுகிறது. இதை பார்த்தாவது மற்ற ஹீரோக்கள் தயாரிப்பாளர்களின் தலையில் சுமையை இறக்காமல் இருந்தால் சரிதான்.