Sasikumar: சசிகுமார், சிம்ரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி கடந்த வாரம் வெளியானது. ரெட்ரோ படத்துடன் மோதுவதாலேயே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ரெட்ரோவை மிஞ்சி இப்போது ஆடியன்ஸை சென்றடைந்து இருக்கிறது இப்படம். கோடை விடுமுறை என்பதால் கூட்டம் கூட்டமாக மக்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் பட குழுவினர் இப்போது செம கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கிறது ஃப்ரீடம்.
சூட்டோடு சூடாக அடுத்த ஹிட்டுக்கு தயாரான சசிகுமார்
சத்யசிவா இயக்கியுள்ள இப்படமும் ஒரு ஃபீல் குட் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜெய் பீம் நாயகி லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் அப்டேட் வரும் மே 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை பட குழு ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளது.
மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதால் இப்படம் அதே சூட்டோடு வெளியாகும் என தெரிகிறது. அதன் அறிவிப்பு தான் வரும் வெள்ளிக்கிழமை வரும் என்கின்றனர்.
தொடர்ந்து நல்ல நல்ல கதையாக தேர்ந்தெடுத்து வரும் சசிகுமாருக்கு இப்படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.