தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அறிமுகமான விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதிலும் இவர் நடித்த சூது கவ்வும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி இவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.
அந்தப் படத்திற்கு வெற்றியின் முக்கிய காரணம் திரைக்கதை. ஒவ்வொரு காட்சிகளும் ரொம்பவே விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற பார்க்கத் தூண்டும் ஆர்வக்கூடிய படமாகவும் வெளிவந்தது. அந்தப் படத்திற்கு இன்றளவும் கூட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதனாலயே இந்த படத்தை மறுபடியும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக அதனுடைய இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் இதில் மிர்ச்சி சிவா, விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியாகி வந்தது. இதை தெரிந்த ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகி புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். இவரை போட்டால் படம் நன்றாக இருக்காது.
அதனால் தயவு செய்து மிர்ச்சி சிவாவை விஜய் சேதுபதி கேரக்டரில் போட்டு படத்தை சொதப்பி விடாதீர்கள் என்று கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் தற்போது வேறு நிலமை மாறிவிட்டது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி கேரக்டரில் இல்லை. பின்பு விஜய்சேதுபதி கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்று கேட்டால் சத்யராஜ் தான் என்பது உறுதியாகிவிட்டது.
மேலும் விஜய் சேதுபதி கேரக்டருக்கு சத்யராஜ் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் தான். ஏனென்றால் காமெடி கலந்த வில்லத்தனம் சத்யராஜிடம் கண்டிப்பாக இருக்கிறது என்பதால் இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே மாதிரி சத்யராஜ் நடித்து வரும் தற்போது படங்கள் எல்லாமே வெற்றி படமாக அமைகிறது.
அந்த ஒரு சென்டிமென்ட் ஆகவே சத்யராஜை சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் இயக்குனர் அர்ஜுன். அத்துடன் விஜய் சேதுபதிக்கும் சத்யராஜுக்கும் இணையான ஒரு கேரக்டர் இருக்கிறது என்றால் அவர்களுடைய எதார்த்தமான நடிப்புதான். அந்த எதார்த்தமான நடிப்பை வைத்து இந்த படம் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது.