இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், திமுக கட்சியின் அ. ராசா, முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக பேசியதற்காக பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வந்துள்ள நிலையில், திமுக தோல்வியை சந்திக்கும்.
என சர்வே முடிவுகளை தற்போது ஐ-பேக் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஆனந்த் திவாரி ஸ்டாலினுக்கு ரகசிய மெயில் ஒன்றை எழுதியுள்ளார். எனவே தற்போது இந்த தகவல் அறிந்து சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ஏனென்றால் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தாயாரை தேர்தல் பிரச்சாரத்தில் போது ஆர். ராசா கடுமையாக விமர்சித்ததால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

அதைத்தொடர்ந்து தேர்தலில் திமுக தோல்வியை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், உடனடியாக ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ-பேக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஆனந்த் திவாரி திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் அதிமுக அதிக இடத்தை பிடிப்பதற்காக வாய்ப்பிருப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் ஆனந்த திவாரி பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது அ. ராசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் திமுக ஆட்டம் கண்டுள்ளதாக தெரிகிறது. எனவே இதன் பின் ஸ்டாலின் திமுக கட்சிக்கு என்ற தனி யூகத்தை வகுத்து செயல்படுத்துவார் என்று அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.