தனுசுக்காக செல்வராகவன் செய்த செயல்.. அப்ப ஸ்கிரீன் கிழிய போகுது

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வசூல் லாபம் பார்த்து வருகிறது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அந்த படத்திற்கு தற்போது ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுசுக்கு இப்படி ஒரு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து அவரின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் நானே வருவேன் திரைப்படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்காக தனுஷ் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ளாராம்.

மேலும் அந்த படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் பீஸ்ட், சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அது பலரின் பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.

அதை தொடர்ந்து தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திலும் அவர் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு செல்வராகவன் வேறு ஒரு நடிகரை தான் தேர்வு செய்திருக்கிறார்.

அதன் பிறகு தனுசுக்காகத்தான் அவரே அந்த கதாபாத்திரத்தை நடிக்க முடிவெடுத்தாராம். இது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. அந்த வகையில் அண்ணன், தம்பி இருவரும் திரையில் தோன்றும் அந்த காட்சியை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.