Director Selvaragavan: செல்வராகவன் இயக்கிய படங்கள் முக்கால்வாசி புரியாத புதிராகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படமாகவும் இருக்காது. ஆனால் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல இயக்குனர் என்று அங்கீகாரத்தை பெற்று விட்டார். தொடர்ந்து இவரால் படத்தை எடுக்க முடியாததால் அவ்வப்போது நடிகராகவும் பயணித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்க் ஆண்டனி மற்றும் தனுஷின் ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மீண்டும் இவருடைய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க இருக்கிறார். அதாவது இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற நிலையில், எப்போதுமே மறக்க முடியாத படமாக ஒரு படத்தை சொல்லலாம்.
அந்த படத்திற்கு இன்னும் ரசிகர்கள் ஏராளமானவர் இருக்கிறார்கள். எப்பொழுது டிவியில் போட்டாலும், இருக்கும் இடத்தை விட்டு போகாமல் பார்க்கக்கூடிய படமாக ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அந்தப் படத்தை தான் மறுபடியும் எடுக்கப் போகிறார். அதாவது செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.
இப்படத்தில் ஹீரோவாக முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா நடிக்க இருக்கிறார். ஆனால் அதில் இவருக்கு ஜோடியாக இவருடைய எக்ஸ் பொண்டாட்டியான சோனியா அகர்வால் நடித்திருந்தார். கண்டிப்பாக இவரை மறுபடியும் நடிக்க வைக்க மாட்டார். அதற்காக ஹீரோயினை தேடும் படலத்தில் இறங்கி விட்டார். அந்த வகையில் இரண்டு ஹீரோயின்கள் இவருடைய கதைக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்து வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோயினான இரண்டு பேர். அதில் ஒரு நடிகை லவ் டுடே படத்தின் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்த இவானா. மற்றொரு நடிகை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி. ஆனால் இவருடைய படத்தில் படுக்கை அறை காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் எல்லை மீறி இருப்பதால் அதிதி நடிப்பதற்கு இன்னும் சங்கர் சம்மதம் கொடுக்கவில்லை.
இவர் இல்லை என்றால் இவானாவை நடிக்க வைக்கலாம் என்று செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார். இதை தெரிந்த ரசிகர்கள் எங்களுக்கு இவானா தான் வேணும் அதிதி வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். அத்துடன் இவர் படம் என்றாலே கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜா இல்லாமல் இருக்காது. அந்த வகையில் இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார். கண்டிப்பாக இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும்.