செல்வராகவனை செருப்பால் அடித்த பிரபலம்.. விடாப்பிடியாக இருந்த இயக்குனர்

செல்வராகவன் இயக்குனராக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நிலையில் தற்போது நடிகராகவும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பகாசூரன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தனது தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுவயது முதலே செல்வராகவனுக்கு சினிமா மீது தான் ஆர்வம் இருந்துள்ளது. இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் குறைந்த மதிப்பெண் எடுத்து வந்துள்ளார்.

மேலும் செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜாவும் இயக்குனர் என்பதினால் இவருக்கும் சினிமா மீது ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் கஸ்தூரிராஜாவுக்கு தனது மகன் படித்து பெரியாளாக வேண்டும் என எண்ணினார். இதனால் வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று கஸ்தூரிராஜா முடிவு செய்து இருந்தார்.

ஆனால் அங்கும் சினிமா மீது உள்ள ஆசையால் எதையும் ஒழுங்காக செய்யாமல் சுற்றி திரிந்துள்ளார். இதனால் ஒழுங்கா படி என்று சொல்லி செல்வராகவனை அவருடைய தந்தை கஸ்தூரிராஜா செருப்பால் அடித்துள்ளார். அப்போதும் சினிமா தான் எனக்கு வேண்டும் என விடாப்பிடியாக இருந்துள்ளார் செல்வராகவன்.

அதன் பின்பு தான் தனது மகனின் ஆசையை புரிந்து கொண்டு சினிமாவிலேயே அவருக்கு வாய்ப்பை பெற்று தந்துள்ளார் கஸ்தூரிராஜா. ஒருவேளை செல்வராகவன் தனது தந்தை பேச்சை கேட்டுக் கொண்டு சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்க மாட்டார்.

அதை காட்டிலும் தமிழ் சினிமாவில் தனுஷ் என்ற ஹீரோவே இடம் பெற்றிருக்க மாட்டார். ஏனென்றால் தனுஷை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஒரு முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற வைத்ததில் செல்வராகவனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகையால் செல்வராகவன், தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.