ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷை வைத்த நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் செல்வராகவன் சமீபத்தில் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதில் மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.

அதாவது ஒரு படத்தால் கிட்டத்தட்ட 12 வருடம் கடனில் தவித்ததாக செல்வராகவன் கூறியிருந்தார். பொதுவாக ஒரு படம் தோல்வியடைந்தால் இயக்குனரை காட்டிலும் மிகுந்த நஷ்டம் அடைவது தயாரிப்பாளர்கள் தான். ஆனால் இயக்குனரான செல்வராகவன் ஏன் கடனால் அவதிப்பட்டார் என்ற விஷயத்தை கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை சந்தித்தது. ஏனென்றால் இந்தக் கதையில் ரசிகர்களுக்கு குழப்பம் இருந்தது. அதன் பிறகு இந்த கதையை புரிந்து கொண்ட ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடினார்கள்.

ஆனால் என்ன பிரயோஜனம் படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இயக்குனர் செல்வராகவன் 18 கோடி பட்ஜெட் சொல்லி இருந்தார். ஆனால் முழு படத்தையும் எடுத்து முடிக்க கிட்டத்தட்ட 30 கோடி செலவாகி உள்ளது.

இதனால் தயாரிப்பாளரிடம் பணத்தை கேட்கக்கூடாது என முடிவு செய்த செல்வராகவன் வட்டிக்கு பணத்தை வாங்கி மீதம் உள்ள 12 கோடியை தானே போட்டு படத்தை எடுத்துள்ளார். மேலும் தமிழில் ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடினாலும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று தந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் இல்லை.

ஆனால் செல்வராகவன் தன்னுடைய கடனை அடைக்க முடியாமல் கிட்டத்தட்ட 12 வருடங்களாக கஷ்டப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். இதனால்தான் தற்போதும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தாலும் செல்வராகவன் இப்படத்தை எடுக்க முயற்சிக்கவில்லை.