வலிமை படத்திலிருந்து விலகிய முக்கிய நட்சத்திரங்கள்.. சுத்தம் என தலையில் கைவைத்த படக்குழு

தல அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் மீதி உள்ளது.

பல நாட்களாக இந்த படம் படமாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் காட்சிகளில் நடித்த சீனியர் நடிகர்கள் பலரும் உடல் நிலையை கருத்தில் கொண்டு கொரானாவுக்கு பயந்து படத்திலிருந்து விலகி விட்டார்களாம்.

இதனால் வலிமை படத்திற்கு ஏகப்பட்ட தலைவலிகளை வந்துள்ளது. தற்போது புதிதாக ஆட்களைப் பிடித்து அவர்கள் விலகிய காட்சிகளை மீண்டும் ஷூட் செய்ய வேண்டுமாம்.

ஏற்கனவே வலிமை படத்தின் படப்பிடிப்புகள் காலம் கடந்து சென்ற நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் இப்படத்திற்கு சோதனை கொடுக்கும் விதமாக ஒவ்வொரு விஷயங்களும் அமைந்து வருவது தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தல அஜித்தின் சினிமா கேரியரில் நீண்ட நாட்கள் படமாகும் படமாகவும் வலிமை இடம் பெற்றுவிட்டது. இதற்கு முன்னதாக விவேகம் திரைப்படம் தான் நீண்ட நாட்கள் படமாக்கப்பட்டது.

வலிமை படம் தொடங்கியதிலிருந்தே அஜீத்துக்கு அடிபட்டு சில காலம் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது கொரானா வேறு, இனி எப்போ படத்தை முடித்து, எப்போது ரிலீஸ் செய்யப் போகிறார்களோ என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் தீபாவளிக்கு தல வருவது கன்பார்ம் என்கிறார்கள் தல வட்டாரங்கள்.

ajith-valimai-cinemapettai
ajith-valimai-cinemapettai