தொடர் கொலை மிரட்டல்.. மனஉளைச்சல், மாரடைப்பு மகளுடன் வெளிநாடு தப்பி சென்ற நயன்தாரா பட முரட்டு வில்லன்

பாலிவுட் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே அங்கு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் சுப்ரமணியபுரம்.

இப்படம் வெளிவந்த காலத்தில் பல மொழிகளிலும் படத்தை ரீமேக் செய்ய பலதரப்பினரும் முன்வந்தனர். இப்படத்திற்கான ஹிந்தி ரீமேக் உரிமை அனுராக் காஷ்யப் வாங்கி “கேங்ஸ் ஆப் வாசிப்பூர்” எனும் பெயரில் படத்தை இயக்கினார். எப்படி தமிழில் சுப்பிரமணியபுரம் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதோ அதே அளவிற்கு இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன்பின் அனுராக் காஷ்யப் டாப்ஸியை வைத்து “டோபாரா” எனும் படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் முரட்டு வில்லனாகவும் நடித்திருப்பார். இவர் தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார். இதனால் இவருடைய மகளும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அனுராக் காஷ்யப்பிற்கு ஆலியா என்ற மகள் உள்ளார்.

இவர் சிசிஏ குறித்த பிரச்சனை இருந்தபொழுது பிரச்சனையை பற்றி சட்டத்திற்கு எதிராக தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். சிசிஏ சட்டத்திற்கு எதிராக தனது கருத்தினை பேசியதற்காக ஆலியாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் சிலர் இயக்குனர் அனுராக்கிடம், உனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிடுவதாக நேரடியாகவே மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன அனுராக் 3 ஆண்டுகளாக தான் மிகவும் மனஉளைச்சலில் இருந்ததாகவும். அதனால் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அனுராக் கூறியுள்ளார். இச்சம்பவத்தால் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருப்பதாக அனுராக் கூறியுள்ளார்.

இயக்குனர் அனுராக் இச்சம்பவத்தின் காரணமாக தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு அனுராக் கூறி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.