சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கடித்தவர் தான் ஷகிலா. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் மலையாள திரையுலகில் இவர் வெகு பிரபலமானவர். இவருடைய படங்களை பார்ப்பதற்காகவே தவம் கிடந்த இளசுகளும் ஏராளம் உண்டு.
இப்படி ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஷகிலாவால் டாப் ஹீரோக்களின் படங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது. அதிலும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடிகர்களின் படங்களை மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஷகிலா படங்கள் காலி செய்த நிலையும் அப்போது இருந்தது.
அதனாலேயே பல தயாரிப்பாளர்களும் இவரை வைத்து படம் எடுக்க நீ, நான் என போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். இப்படி எல்லாம் புகழின் உச்சியில் இருந்த ஷகிலா ஒரு காலகட்டத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஏனென்றால் அங்கு இவரை வளர விடாமல் சில சதி வேலைகள் நடந்திருக்கிறது.
அதைப் பற்றி ஷகிலாவே ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது நான் நடித்த மலையாள படங்கள் வெளிவர முடியாத அளவுக்கு பல சிக்கல்களை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் மம்முட்டி தான் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் எனக்கு அவர் மேல் எந்த கோபமும் கிடையாது.
ஏனென்றால் என்னுடைய படங்களால் பல நடிகர்களின் படங்கள் நஷ்டமடைந்து இருக்கிறது. அப்படி இருந்தால் யாருக்கு தான் கோபம் வராது. அதன் காரணமாகத்தான் மம்முட்டிக்கு என் மேல் ஒரு கோபம் இருந்திருக்கும். நான் அதை பெரிதாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். இப்படி மம்முட்டி செய்த சில விஷயங்களால் ஷகிலாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
அது மட்டுமல்லாமல் அவருடைய படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமலும் இழுத்தடித்திருக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டம் அடைந்திருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து தான் ஷகிலா மலையாள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். தற்போது சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தை உடைத்து காட்டியிருக்கிறார்.