Ajith, Shalini: சினிமாவில் நட்சத்திர ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடித்த போது இவர்களுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் இருவிட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகியும் தற்போது வரை காதல் குறையாமல் அப்படியே இருக்கிறது.
ஆனால் ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். தனது குடும்பம் மற்றும் குழந்தை என அவர்களை கவனிப்பதில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தனது மகனுடன் முதல் நாள் காட்சியை பார்க்க ஷாலினி செல்வார்.
மேலும் சமீபகாலமாக அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்போதும் இளமை மாறாமல் அதே அழகுடன் ஷாலினி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் அஜித்தின் அன்பு, அக்கறை என்று கூட சொல்லலாம்.
மேலும் இப்போதும் இளமையுடன் இருக்கும் ஷாலினி தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகள் மற்றும் ஆத்விக் என்ற மகன் உள்ளார். அனோஷ்கா இப்போது டீன் ஏஜ் வயதை எட்டி விட்டார்.
இந்நிலையில் ஷாலினி மற்றும் அனோஷ்கா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்க்கும் போது இதில் யார் அம்மா, மகள் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள். அப்படியே அஜித்தின் மகள் ஷாலினியை உரித்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
ஷாலினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அஜித்தின் மகள்
