ஷங்கர் படத்தில் முரட்டு வில்லனான முன்னணி நடிகர்.. இந்த ஒன்னு போதும் நின்னு பேசும் என்ற நடிகர்

ஷங்கரை தமிழ் சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்களும் வேறு மொழியில் படம் இயக்கக் கூடாது என்பதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் 2 பிரச்சனையில் லைகா நிறுவனம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து விரைவில் எடுக்க உள்ளார் ஷங்கர். இதற்காக அந்நியன் படத்தைத் தயாரித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தற்போது தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான கதை விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அந்த வகையில் முதலில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த கூட்டணியில் வில்லனாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை மிரட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். மேலும் தெலுங்கு சினிமாவில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

அதுமட்டும் இல்லாமல் நேரடியாக தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்திலும் இவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருந்ததால் விஜய் சேதுபதியை வில்லனாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

விஜய்யுடன் நடித்ததற்கு சம்பளத்தை 10 கோடிக்கு மேல் ஏற்றிய விஜய்சேதுபதி ஷங்கர் படத்தில் நடித்தால் கண்டிப்பாக தன்னுடைய சம்பளத்தை இன்னும் அதிகப்படுத்தி விடுவார் என்பது மட்டும் உறுதி. அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்த படத்தை விஜய் சேதுபதி மிஸ் செய்ய மாட்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டாரங்கள்.

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai