4 வருடங்களுக்குப் பிறகு ஃபுல் ஃபார்மில் இறங்கிய ஷங்கர்..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபகாலமாக பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தார். கடந்த 2018 ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. ஷங்கர், லைக்கா, கமலஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

அதுமட்டுமின்றி ஷங்கரின் மூத்த மகளின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் நாளா பக்கத்திலிருந்தும் ஷங்கர் சிக்கலில் இருந்தார். தற்போது தான் அவருக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. அதாவது சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்த விருமன் படம் வசூலில் சக்கை போடு போட்டது.

மேலும் அதிதிக்கு ஏராளமான ரசிகர்களும் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஷங்கர் தற்போது ராம்சரனின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அங்கு போராட்டம் நடைபெற்றதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ராம்சரண் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 20 தேதியிலிருந்து இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற உள்ளது.

இப்போதுதான் ஷங்கர் பழையபடி ஃபுல் ஃபார்மிருக்கு வந்து சக்கரம் போல சுழற்றி சுழற்றி வேலை செய்ய உள்ளார். மேலும் இடைவெளியே இல்லாமல் இரண்டு படங்களில் மாறி மாறி படப்பிடிப்பு நடத்த உள்ளார். இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 இரண்டிற்கும் வெவ்வேறு டீமை ஷங்கர் அமைத்துள்ளாராம். இதனால் ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்ய உள்ளார்.

தற்போது முழுவீச்சாக சங்கர் தனது பட வேளையில் ஈடுபட உள்ளார். இதனால் பல வருடமாக இந்தியன் 2 படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விரைவில் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாக இருக்கிறது. மேலும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கர்ப்பமாக இருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார். இப்போது அவருக்கு குழந்தை பிறந்து விட்டதால் இப்படத்தில் மீண்டும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.