1. Home
  2. கோலிவுட்

ஒருவழியா ரிலீசுக்கு தயாரான படை தலைவன்.. கேப்டன் வாரிசுக்கு ஆதரவு இருக்குமா.?

ஒருவழியா ரிலீசுக்கு தயாரான படை தலைவன்.. கேப்டன் வாரிசுக்கு ஆதரவு இருக்குமா.?

Padai Thalaivan: கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படை தலைவன் உருவாகி இருக்கிறது. அன்பு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதமே இப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போனது. அதை அடுத்து மே 23 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாந்த் லேபில் நடைபெறுகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்டர், டீசர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

கேப்டன் வாரிசுக்கு ஆதரவு இருக்குமா.?

அதிலும் ஹீரோ இரண்டு யானைகளுக்கு நடுவே சண்டை செய்யும் காட்சி எல்லாம் வேற லெவலில் இருந்தது. அதேபோல் படம் முழுக்க ஆக்சன் அதிரடி தான்.

மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். கேப்டன் இறந்த பிறகு அவருடைய வாரிசுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

அது மட்டும் இன்றி சிறு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால் கூட தயார் என்று சொல்லியிருந்தார். அதன்படி படை தலைவன் படத்தில் சண்முக பாண்டியனுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் அவர் நடித்துள்ளார்.

இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே போல் கேப்டன் வாரிசுக்கு எப்போதும் ஆதரவு உண்டு என நெட்டிசன்களும் வாழ்த்தி வருகின்றனர் .

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.