முட்டி மோதிப் பார்த்த சாந்தனு.. நமக்கு என்ன வருதோ அதை செஞ்சுகிட்டு போயிட்டே இருக்கணும்!

சாந்தனு பாக்யராஜ், துறுதுறுவென்ற நடிப்பு, துள்ளல் நடனம் என 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அடுத்தடுத்து காதல் திரைப்படங்கள் நடித்து வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் இன்றுவரை ஒரு நல்ல படம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

பாக்யராஜ் திரைக்கதைகளின் மன்னன் என்றே சொல்லலாம். கோலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இன்று வரை ஒரு சக்ஸஸ்புல்லான படத்தை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

அம்மாவின் கைபேசி, வானம் கொட்டட்டும், பாவக்கதைகள் என கிடைத்த நல்ல படங்களிலும் நன்றாகவே நடிக்கிறார். ஆனால் ஆரம்ப காலங்களில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைகளே இவருடைய பெரிய தோல்விக்கு காரணம். தேர்ந்தெடுத்து, திறம்பட நடித்திருந்தால் சாந்தனுவும் இன்று முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்திருப்பார்.

சாந்தனு சிறிய வயதிலிருந்தே சினிமாவுக்காகவே பல பயிற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் நடனம். சாந்தனு நன்றாக டான்ஸ் ஆடக்கூடியவர். இவர் டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டார். அப்போது தான் அவருடைய மனைவி கீர்த்தியுடன் நட்பு ஏற்பட்டது. கீர்த்தியும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சாந்தனுவிற்கு சரியாக படங்கள் எதுவும் அமையவில்லை, அதே நேரத்தில் கீர்த்தியும் அவருடைய அம்மாவுடன் சேர்ந்து டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். சாந்தனுவும் அடிக்கடி ஸ்டுடியோவின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது சில நடன நிகழ்ச்சிகள் செய்து கொடுப்பார். தற்போது சாந்தனு முழு நேரமாகவே ஸ்டூடியோ வேலைகளில் இறங்கி விட்டார். சினிமா செட் ஆகாது என்று தெரிந்து தனக்கு வரும் நடனத்தின் பக்கமே சென்று விட்டார்.

டான்ஸ் ஸ்டூடியோ மட்டும் அல்லாமல் சாந்தனுவும் கீர்த்தியும் சேர்ந்து யூ டீயூப் சேனலை நடத்தி வருகின்றனர். தற்போது ஸ்பாட்டிபையிலும் கலக்கி வருகின்றனர். இதில் அவர்கள் தங்களுடைய காதல் கதை, சுற்றுலா பயணங்கள் போன்றவற்றை பகிர்கின்றனர். இதன்மூலம் இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் அதிகமாகி இருக்கின்றனர்.