கஞ்சன் என பெயர் எடுத்த சிவாஜி.. இதுவரை கொடுத்த நன்கொடையின் மதிப்பு இதுதான்

அந்தக் காலத்தில் சினிமாவில் நடித்து வந்த நடிகர்கள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவி செய்வது, நன்கொடை கொடுப்பது என்று செலவழித்து வந்தனர். ஆனால் அந்த நடிகர்களிலேயே மகாகஞ்சன் என்று பெயரெடுத்த ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.

அவர் இதுவரை பிறருக்காக எந்த உதவியும் செய்தது கிடையாது என்று ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதேபோன்று எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற பெரிய நடிகர்கள் பலரும் பிறருக்காக பணத்தை வாரி இறைப்பார்கள் என்றும் பணத்தை கொடுத்தே இழந்தார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.

ஆனால் உண்மையில் அவர்களை காட்டிலும் சிவாஜி தான் மற்றவர்களுக்கு அதிகமாக உதவி செய்து இருக்கிறாராம். தன்னை தேடி உதவி என்று யார் வந்தாலும் இல்லை என்று அவர் சொல்ல மாட்டாராம். அந்த அளவிற்கு அவர் பணத்தை ஏழை எளியவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். ஆனால் இன்று வரை இந்த விஷயம் எதுவும் பெரிய அளவில் மீடியாவில் வெளியானது கிடையாது.

அந்த வகையில் இன்று வரை சிவாஜி கொடுத்த நன்கொடையின் மதிப்பே கிட்டதட்ட 320 கோடிக்கு மேல் இருக்கும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இப்படி ஒரு விஷயம் அவருடைய சுயசரிதை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் அதிக நன்கொடை கொடுத்த நடிகர்களிலேயே சிவாஜி தான் முதன்மையானவராக இருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தான் தமிழ் திரை உலகில் மகா கஞ்சன் என்று மோசமாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சிவாஜி பிறருக்கு செய்யும் உதவியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தான் செய்திருக்கிறார். இப்போதும் கூட அவருடைய தலைமுறையினர் மற்றவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் ஒருபோதும் அதை பப்ளிசிட்டியாக்க நினைத்தது கிடையாது. இப்போது இருக்கும் நடிகர்களில் சிலர் சிறு விஷயம் செய்தாலே அதை சோசியல் மீடியாவில் போட்டு தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் சிவாஜி இறுதி வரை அனைவருக்கும் உதவி செய்துவிட்டு கஞ்சன் என்ற பெயருடன் மறைந்து போயிருக்கிறார்.