Shivarajkumar Upcoming Movies: ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த பிரபலங்கள் எல்லோருக்கும் இப்போது மவுசு கூடிவிட்டது. அதிலும் குறிப்பாக நரசிம்மா கேரக்டரில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகிறது. கன்னட நடிகரான இவருக்கு தமிழில் கிடைத்துள்ள ரசிகர்களை பார்த்து இவருடைய படங்கள் இப்பொழுது தமிழிலும் தயாராகி வருகிறது.
அதிலும் அடுத்தடுத்து நான்கு படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியாடிக் படமாக தயாராகி இருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். ஜெயிலர் படத்திற்கு பிறகு கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ் குமார் செம ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தென் தமிழகத்தில் நிறைவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கோடி பட்ஜெட்டில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும். இந்த படத்தில் தனுஷ்- சிவராஜ்குமார் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதாம்.
இந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் கோஸ்ட் (ghost ) படத்திலும் சிவராஜ் குமார் நடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக பைரதி ரங்கல் என்ற கன்னட படத்தில் பிரபுதேவா, சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் தமிழில் எடுக்க வேண்டும் என இயக்குனர் அடம் பிடிக்கிறார்.
90களில் சூப்பர் ஸ்டாருக்கு முத்து, படையப்பா போன்ற ஹிட் படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் நடிப்பை பார்த்து அவரை வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் சிவராஜ் குமாரிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். விரைவில் இதன் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது.
இவ்வாறு ஜெயிலர் படத்தில் நரசிம்மாவாக நடித்த பிறகு தமிழ் சினிமாவில் சிவராஜ் குமார் ரொம்பவே ஷைன் ஆகி கொண்டு இருக்கிறார். தற்சமயம் மட்டும் நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், கூடிய விரைவில் தமிழ் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்.