என்னப்பா இது புது உருட்டா இருக்கு.. அஜித், விஜய்யை பற்றி வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

இந்த வருடம் வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக படுதோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டமடைந்து வருவதாகவும் ,இப்படிப்பட்ட தோல்வி படத்தை கொடுப்பதற்காகவா 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் பலரும் விமர்சனம் செய்தனர்.

இதன் காரணமாக நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதையும், தயாரிப்பாளர்கள் கொடுப்பதையும் தடுக்க வேண்டுமென பலரும் போராட்டத்தில் குடித்தனர். மேலும் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர்களிடம் தங்களது பாதி சம்பளத்தை நடிகர்கள் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்றும் பல அமைப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் இதை எதையும் செவிசாய்க்காமல் அஜித் மற்றும் விஜய் தங்களது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி விட்டன.

இப்படி பலரும் இவர்களை கேள்வி கேட்டு வரும் தருவாயில் இவர்களுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அண்மையில் ஒரு பேட்டியில் பேசினார். அதில் விஜயும், அஜித்தும் எனக்கு நூறு கோடி சம்பளம் கொடு, 200 கோடி சம்பளம் கொடு என யாரிடமும் கேட்பதில்லை. அவர்களின் மார்கெட்டுகளுக்கு ஏற்றவாறு அவர்களுக்காக கொடுக்கப்படுகிறது.

உதாரணமாக விஜய், அஜித்தின் திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமே குறைந்தது 75 கோடி வசூல் வரை திரையரங்குகளில் வசூலாகிறது. மேலும் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 6 கோடியில் இருந்து 8 கோடி வரை விநியோகம் செய்யப்படுகிறது.. இவை பத்தாது என சாட்டிலைட் உரிமை என 40 கோடிக்கு மேல் அவர்களது திரைப்படங்கள் தொலைக்காட்சி நிறுவங்களால் வாங்கப்படுகிறது.

அதற்கும் மேலாக பிரபல ஓடிடி நிறுவனங்கள் குறைந்தது 70 கோடியிலிருந்து 150 கோடி வரை விஜய்,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை படம் ரிலீஸாவதற்கு முன்பே வாங்கிவிடுகிறது. மேலும் ஹிந்தி ரைட்ஸ் என அங்கும் இவர்களது திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டு 20 கோடி வரை விநியோகம் செய்யப்படுகிறது.இப்படி கணக்கு போட்டு பார்த்தால் 250 கோடி வரை அசால்டாக இவர்களது திரைப்படங்களுக்கு வசூலாகிறது.

அவ்வளவு கோடி வசூலை தயாரிப்பாளர்களுக்கு அள்ளி கொடுக்கும் நடிகர்களுக்கு 100 கோடி சம்பளம் கொடுக்க கூடாதா என்று ஆர்.கே.சுரேஷ் பேசினார். விஜய், அஜித்தின், படத்தில் கதை இருக்கிறதோ, இல்லையோ, படம் தோல்வியோ, வெற்றியோ விஜய் , அஜித் திரைப்படங்கள் என்றாலே தலா 250 கோடிக்கு மேல் வசூல் இருப்பதால் தான் அவர்களுக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.