TVK-Vijay: 2026 தேர்தல் மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு வெகு தூரமும் கிடையாது. தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதும் மிகப்பெரும் கேள்வி.
தமிழ்நாட்டில் எப்போதுமே இரு பெரும் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை விஜய் போட்டிக்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் அவருடைய கட்சியை மூத்த கட்சிகள் சாதாரணமாகத்தான் எடை போட்டது.
ஆனால் இப்போது அது சாதாரணம் கிடையாது என்பதை நடக்கும் சம்பவங்கள் சொல்லாமல் சொல்கிறது. ஏற்கனவே சிறந்த அரசியல்வாதி என்ற பெயரை பெற்ற விஜய் தற்போது சர்வே முடிவுகளையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்.
ஷாக் கொடுத்த சர்வே ரிப்போர்ட்
அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் எந்த கட்சி இடத்தை பிடிக்கும் என்ற சர்வே எடுக்கப்பட்டது. அதில் அதிர்ச்சி தரும் விதமாக டிவிகே 42% ஆதரவு பெற்றுள்ளது. அடுத்தபடியாக அதிமுக 36 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்து திமுக 11% நாம் தமிழர் கட்சி 11 சதவீதம் பெற்றுள்ளது. இது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளும் ஒரு பக்கம் இருக்கிறது.
அப்படி என்றால் விஜய்யை சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. அனைத்து கட்சிகளும் அவரை தற்போது ஒரு கடுமையான போட்டியாளராக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
அதேபோல் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அப்படியே வாக்காக மாறுமா என்பதும் உறுதி கிடையாது. ஆனாலும் விஜய் ஏற்கனவே சொன்னது போல் இந்த தேர்தல் கடுமையாக இருக்கும் என்பதும் புரிகிறது.
அதன்படி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சர்வே முடிவுகளும் மூத்த கட்சியினருக்கு சவாலாக இருக்கிறது இதில் 2026 தேர்தல் புது வரலாறு படைக்குமா என்பதே பொதுமக்களின் ஆர்வம்.