சித்தார்த் ஒரு அடி முட்டாள்.. இயக்குனர் ராம் பேச்சு

Siddharth : நடிகர் சித்தார்த் அவர்கள் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் என்று கூறலாம். இவர் எவ்வளவு வயதானாலும் இளம் வயதை போல் தோற்றமளிப்பது இவருடைய சிறப்பு. தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தனக்கென நிரந்தரமான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

இவ்வாறு இவர் நடிப்பில் வெளிவந்த பாய்ஸ், ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி, அரண்மனை 2 மற்றும் சித்தா ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பெரும்பாலான படங்களில் இவரின் கதாபாத்திரம் சற்று மெய்சிலிர்க்க வைப்பதாகவே இருந்துள்ளது. தமிழ் திரை உலகின் நீங்காத ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சித்தார்த்.

இவர் தற்போது 3 BHK படத்தில் பணியாற்றி அந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 3 BHK படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு ஆகியவர்கள் முக்கியமான சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் விஷ்வா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 4, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் இந்த படம் வித்தியாசமான கதைக்களம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த் ஒரு அடி முட்டாள்..

இந்நிலையில் 3 BHK பட விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இப்படத்தை பற்றி மனமுருக பேசி இருக்கின்றனர். இதில் வருகை தந்த இயக்குனர் ராம் அவர்கள், நடிகர் சித்தார்த்தை அடி முட்டாள் என கூறியுள்ளார். அதாவது இயக்குனர் ராம் அவர்கள் நான் சித்தார்த்தை ஆடம்பரமான ஒருவர் என்றும், அகங்காரம் பிடித்தவர், அடுத்தவர் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடிய நபர் என்றும் நன் தவறாக நினைத்திருந்தேன்.

ஆனால் சித்தார்த்தோ “ஒரு அடிமுட்டாள்” என்று கூறியுள்ளார். அதாவது நான் தவறான அர்த்தத்தில் கூறவில்லை. சித்தார்த் ஒரு வளர்ந்த குழந்தை என்றும், வெகுளித்தனமான மனிதர் என்றும். அவர் ஏன் இன்னும் இளமையாகி இருக்கிறார் என்றால் அவரது மனது இன்றும் இளமையாக இருக்கிறது என்றும் சித்தார்த்தை புகழ்ந்துள்ளார். அவர் திரையுலகில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.