சினிமாவில் நடிக்க ஒரு அரிய வாய்ப்பு தரும் சித்தார்த்.. இந்த குவாலிடீஸ் மட்டும் இருந்தால் போதும்!

நடிகர் சித்தார்த் நடிப்பில் சைத்தான் கி பச்சா, டக்கர் ஆகிய படங்கள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அவர் சர்வானந்துடன் இணைந்து நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் நடிகர் சித்தார்த். தற்போது புதிய படம் ஒன்றில் நடிகர் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த்தின் 35 வது படமாக தயாராகும் இப்படத்தில் நடிக்க ஆண், பெண் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள்.

அதன்படி, இப்படத்தில் வில்லனாக நடிக்க 30 – 35 வயதுள்ள ஆண் நடிகர்கள் தேவைப்படுகின்றனர். அதேபோல் வடஇந்திய முகச்சாயல் கொண்ட 30 – 50 வயதுள்ள ஆண் நடிகர்களும், வடஇந்திய முகச்சாயல் கொண்ட 20 – 30 வயதுள்ள பெண் நடிகர்களும், 6 – 8 வயதுள்ள குழந்தை நட்சத்திரங்களும் தேவைப்படுகின்றனர்.

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் 5 புகைப்படங்களை siddarth35@gmail.com என்ற மெயிலுக்கோ அல்லது 9626230062 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்பலாம் என நடிகர் சித்தார்த் கேட்டுக் கொண்டுள்ளார். புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 15.

ஒரு நடிகராக இருந்தாலும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என நடிகர் சித்தார்த் எடுத்துள்ள இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. எனவே படிப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

siddarth