Takkar Movie: கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளியான படம் தான் டக்கர். இந்தப் படத்தின் டைட்டில் மட்டும்தான் டக்கரா இல்ல படமே டக்கரா என்பதை ட்விட்டர் விமர்சனத்தின் மூலம் பார்ப்போம்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில், எப்போதுமே சாக்லேட் பாயாக நடிக்கும் சித்தார்த் இந்த முறை ராக்கட் பாயாக மாறி ரவுண்ட் கட்டி இருக்கிறார். படத்தின் முதல் பாதி பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. வேகமாக செல்லும் ஸ்கிரீன் ப்ளே மற்றும் படத்தில் எந்த ஒரு நான்சென்ஸ் காட்சிகளும் இடம்பெறாமல் இருப்பதே இந்த படத்திற்கு கூடுதல் பலன் சேர்கிறது.

முதல் பாதி இரண்டும் பாதியை விட எவ்வளவோ மேல். படத்தில் நடித்திருக்கும் சித்தார்த் மற்றும் திவ்யான்ஷாவின் நடிப்பு ஓகே தான். இந்த படத்தின் கதையில் அப்டேட் இருந்திருக்க வேண்டும். ஸ்கிரீன் ப்ளேயில் இரண்டாம் பாதி ஒஸ்ட். மியூசிக்கும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. காமெடியும் சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை. எமோஷனல் சுத்த வேஸ்ட்.
ஆக்சன் காட்சிகளில் சீட்டை விட்டு ஓடும் அளவுக்கு சூடேற்றி விட்டனர். மொத்தத்தில் முதல் பாதி இரண்டாம் பாதியை விட எவ்வளவோ மேல். படத்தின் பெயர் மட்டும் டக்கர் பார்த்தவர்களுக்கு தான் தெரியும், அது டுபாக்கூர்னு. டக்கர் படத்தின் கடைசி 40 நிமிட படத்தை பார்க்கவே முடியல. அந்த அளவிற்கு மோசமாக எடுத்திருக்கின்றனர்.

படத்தின் கதை பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் சித்தார்த்தின் நடிப்பு முதல் பாதியில் இருந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் இருந்திருந்தால் படம் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். சிலர் இந்த படம் ஃபுல் என்டர்டைன்மென்ட் படம் என்றும் கூறுகின்றனர்.
சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பக்கா கமர்சியல் படமான டக்கர் படத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறேன் என நிறைய பேட்டிகளில் கூறியதால், அதை நம்பி தியேட்டருக்கு பார்க்கச் சென்று, ஏமாற்றத்தை சந்தித்தது தான் மிச்சம் என்றும் சிலர் புலம்புகின்றனர். படம் சுமாராக இருந்தாலும், அடிக்கிற வெயிலுக்கு வீட்டின் இருப்பதை விட குளுகுளுன்னு ஏசியில் இருக்க விரும்புவர்கள் அதற்காக வேண்டுமானால் இந்த படத்தை சென்று பார்க்கலாம்.
