டாப் ஹீரோக்களால் நொந்து போன நெட்பிளிக்ஸ்.. சித்தார்த்துக்கு கொடுத்த தலைவலி

Siddharth : பொதுவாகவே படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது. படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் சித்தார்துக்கு நெட்பளிக்ஸால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

பெரிய நடிகர்களின் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் வாங்குகிறது. பெரிய தொகைக்கு வாங்கும் சில படங்கள் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்ததால் நெட்பிளிக்ஸுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை வெளியிட்டது.

இது மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சூர்யாவின் ரெட்ரோ படத்தை வாங்கிய நிலையில் இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. தியேட்டரில் ஒரு சராசரியான வசூலை பெற்றாலும் ஓடிடி பெரிய கவனம் பெறவில்லை.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் சித்தார்த்துக்கு ஏற்பட்ட சிக்கல்

அடுத்ததாக மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான தக் லைஃப் படத்தை வாங்கியது. இரண்டாவது நாளில் இந்த படம் தியேட்டரில் காற்று வாங்கிய நிலையில் ஓடிடியில் சொல்லவா வேண்டும். இவ்வாறு பெரிய நடிகர்களை நம்பி பணம் போட்டு நஷ்டத்தை இந்நிறுவனம் சந்தித்தது.

இந்த சூழலில் வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3BHK படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்துவிட்டதாம்.

அதாவது பெரிய நடிகர்களை நம்பி நஷ்டத்தை சந்தித்ததால் இந்த படமும் எப்படி இருக்குமோ என்று இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். ஆனால் சித்தார்த்தின் 3BHK படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்று வருகிறது. படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று சொல்லப்படுகிறது.