யோசிக்காம நடிச்சு தொலைச்சுட்டேன்னு 5 ஹீரோயின்கள் புலம்பிய படங்கள்.. கேரியரையே இழந்த சிம்ரன், நஸ்ரியா

ஸ்ரீதேவி, மீனா, சிம்ரன், நயன்தாரா, திரிஷா போன்ற ஹீரோயின்கள் 10 வருடங்களுக்கு மேல் தங்களுடைய அந்தஸ்தில் கொஞ்சம் கூட குறையாமல் சினிமா துறையை ஆட்சி செய்து வந்தனர். ஆனால் யானைக்கு அடிசறுக்கும் என்பது போல் பெரிய பெரிய ஹீரோயின்களுக்கும் கேரியரையே கேள்விக்குறியாக்கிய படங்களும் இருக்கிறது

யாஷிகா ஆனந்த்: தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையதளத்தில் பறக்க விட்டார் யாஷிகா. அதன் மூலம் இவருக்கு விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ, பிக் பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பல படங்களில் ஹீரோயினாக நடிப்பு வந்தார். அடல்ட் படமான, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவர் சினிமா கேரியரையே கேள்விக்குறியாக்கியது. இவரை அந்த மாதிரி ஹீரோயின் என முத்திரை குத்தி விட்டனர்.

நஸ்ரியா: சினிமாவில் லைம் லைட்டில் இருக்கும்போதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தனுசுக்கு ஜோடி என்று நையாண்டி படத்தில் நடித்தார் ஆனால் ஹீரோயினுக்கு உண்டான எந்த வேலையும் அவருக்கு கொடுக்கவில்லையாம். மாறாக ஒரு காமெடி கதாபாத்திரம் போல் இவரை ஆக்கிவிட்டனராம்

சிம்ரன்: இன்று வரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் சிம்ரன் தன்னுடைய கேரியரில் தப்பான செலக்சன் என்றால் அது “பார்த்தேன் ரசித்தேன்” படம் தான் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். முதன்முதலாக வில்லி கதாபாத்திரம் நடித்ததால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு ஆபத்தாய் முடிந்தது என்றும் கூறினார்.

நயன்தாரா: சூர்யா மற்றும் அசின் நடித்த கஜினி படத்தில் இவர் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி இவரை ஏமாற்றி விட்டார்களாம். அதன் பிறகு இவரை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்து விட்டனர்.

இந்துஜா ரவிச்சந்திரன்: ஆர் கே சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரை ஒரு கிளாமர் ஹீரோயினாகவே பாட்டி இறந்தனர். இது அவருக்கு அடுத்தடுத்த கட்டங்களில் கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே பெற்று தந்ததாம். இந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டு வருகிறார் இந்துஜா.