நடனத்தால் கிரங்கடித்த சிம்ரன்.. 90ஸ் கனவு கன்னியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Simran: விஜய்க்கு இணையாக தமிழ் சினிமாவில் நடனம் ஆடக்கூடியவர் என்றால் அது சிம்ரன் தான். 90களில் அடுத்தடுத்த பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு தமிழில் என்ட்ரி கொடுத்த படம் தான் விஐபி. இதை அடுத்து விஜய் உடன் ஜோடி போட்டு நேருக்கு நேர் படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக தளபதியுடனே பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் என நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திருமணம் செய்து கொண்டு செட்டிலான சிம்ரன் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

சிம்ரனின் சொத்து மதிப்பு

அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களை கவனித்து வந்தார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் உருவான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இப்போதும் சிம்ரன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று சிம்ரன் தனது 49 ஆவது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரது சொத்து மதிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிம்ரன் ஒரு படத்திற்கு 60 லட்சம் வரை வாங்கும் நிலையில் மொத்த சொத்து மதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது. மேலும் சிம்ரன் இடம் பிஎம்டபிள்யூ, ஆடி Q7 ஆகிய கார்கள் இருக்கிறது. இது தவிர ஒரே ஹோட்டலையும் சிம்ரன் நிர்வாகித்து வருகிறாராம்.

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெறுவது மற்றும் விளம்பரங்களில் நடிப்பது என அதன் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார். இவ்வாறு சிம்ரன் இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

Leave a Comment