கேஜிஎஃப் பாணியில் சூர்யாவின் 42-வது படம்.. மாஸாக வந்து பூஜை போட்ட ரொலெக்ஸ் புகைப்படம்

ஜெய்பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரள வைத்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார்.

இவ்வாறு அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்கும் சூர்யா கைவசம் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், பாலாவின் வணங்கான் ஆகிய 2 படங்கள் இருந்த நிலையில், அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பை முழுமையாக முடிக்காமல் 3-வது படத்திற்கான சிறுத்தை சிவாவுடன் சூர்யா 42 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

கேஜிஎஃப் பாணியில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை 2 பாகங்களாக தயாரிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார்.

படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு ஆதிநாராயணன் கதை எழுத, மதன் கார்க்கி வசனகர்த்தாவாக படத்தில் பணியாற்ற உள்ளார்.

இன்று 7 மணி அளவில் சென்னை ராமாபுரத்தில் நடைபெற்ற சூர்யாவின் 42-வது படத்திற்கான பூஜையை தொடர்ந்து நாளை முதல் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே வணங்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வாடிவாசல் படத்திற்கு செல்லலாம் என நினைத்த சூர்யாவிற்கு, இன்னும் இயக்குனர் பாலா வணங்கான் படத்திற்கான முழுக்கதையையும் தயாரிக்காமல் இருக்கிறார்.

suriya-42
suriya-42

மேலும் வாடிவாசல் படத்துக்காக சூர்யா காளைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த கால இடைவெளியை பயன்படுத்தி சிறுத்தை சிவா படத்தை முடித்து விடலாம் என சூர்யா தன்னுடைய 42-வது படத்திற்கான படப்பிடிப்பில் நாளின் முதல் கலந்து கொள்ளப் போகிறார்.