Sivaji-MGR: அக்கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பிய இரண்டு ஜாம்பவான்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. தனித்தனியே தன் திறமைக்கான படங்களை மேற்கொண்டு வெற்றி கண்ட இவர்கள் இருவரிடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்நிலையில் பாதியிலே நின்று போன சிவாஜி படத்தை, எம்ஜிஆர் முன்வந்து நடித்து கொடுத்து உதவி செய்த சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.
நடிப்புக்கே பேர் போனவர் சிவாஜி கணேசன். அவ்வாறு இவர் நடிப்பில் எண்ணற்ற படங்கள் மாபெரும் வெற்றியை சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் சிவாஜி நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாக இருந்த படம் தான் வைர நெஞ்சம். இப்படத்தை ஹிந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் தான் இயக்குனர் ஸ்ரீதர் மேற்கொண்டார்.
ஹிந்தி படப்பிடிப்பு விரைவாக முடிந்து விட்ட காரணத்தால் இப்படம் சீக்கிரமாகவே வெளிவந்தது. ஆயினும் தோல்வியை தான் சந்தித்தது. அதன் பின் மனம் நொந்து போய் இருந்த ஸ்ரீதரை கண்ட எம்ஜிஆர், நான் வேணா படம் நடித்து தருகிறேன் என வலிய வந்து உதவி செய்தாராம்.
அப்படி உருவான படம் தான் உரிமை குரல். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பண்ணையாராய் நம்பியார் நடித்திருப்பார். பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இப்படம் நல்ல வசூலை பெற்று தந்தது. அவ்வாறு இப்படத்தின் தயாரிப்பையும், இயக்கத்தையும் மேற்கொண்ட ஸ்ரீதர் இந்த படத்தின் லாபத்தைக் கொண்டு தான் சிவாஜி நடிப்பில் வைர நெஞ்சம் என்னும் படத்தை உருவாக்கினார்.
இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மபிரியா, முத்துராமன், பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இருப்பினும் இவ்வளவு சிரமத்திற்கு பிறகு இரண்டு மொழிகளிலும் வெளிவந்து இப்படம் பெரும் தோல்வியை தான் சந்தித்தது.
அவ்வாறு தன்னிடம் உதவி என நாடி வந்தவர்களுக்கு எம்ஜிஆர் சும்மா அனுப்பியது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருந்து வருகிறது. அவ்வாறு சிவாஜி படத்தை மேற்கொள்ள வலிய வந்து படம் நடித்து அப்படத்தின் லாபத்தைக் கொண்டு தொடங்கிய படம் தான் வைர நெஞ்சம். இவர்களின் நட்புக்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.