2025 இல் குடும்பங்களை கவர்ந்த 6 படங்கள்.. பட்டையைக் கிளப்பும் தலைவன் தலைவி

Vijay Sethupathi : 2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் சொதப்பியது. விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அடி வாங்கியது. ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய லாபத்தை கொடுத்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகி வெற்றி கண்ட படங்களை பார்க்கலாம். மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து சூரியின் நடிப்பில் வெளியான படம் தான் மாமன். தாய்மாமன் உறவு எப்படிப்பட்டது என்பதை வெளிக்காட்டும்படி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

2025 இல் குடும்பங்கள் கொண்டாடிய ஆறு படங்கள்

இலங்கையிலிருந்து வந்த தமிழ் குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை நகைச்சுவையாக கொடுத்திருந்தனர். மேலும் சித்தார்த் நடிப்பில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் படி வெளியான படம் 3BHK.

இதை அடுத்து ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகி இருந்தது பறந்த போ படம். அப்பா, மகன் இடையே ஆன உறவை அற்புதமாக வெளிப்படுத்தும் படமாக அமைந்தது. இப்போது தியேட்டரில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது தலைவன் தலைவி.

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான இந்த படம் கணவன், மனைவி இடையே நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாக கொடுத்திருக்கிறது. இந்த படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு செல்கின்றனர்.