Rajini : இந்த வருடம் தொடக்கத்தில் விடாமுயற்சி, டிராகன், மதகஜ ராஜா, வீரதீர சூரன், குட் பேட் அக்லி போன்ற படங்கள் வெளியானது. சில படங்கள் தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை தட்டி சென்றது.
அந்த வகையில் சமீபத்தில் சத்தமே இல்லாமல் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பெரும் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கும் படங்களை இப்போது பார்க்கலாம்.
முதலாவதாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு சற்று கூடுதல் ஆகத்தான் இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மதராசி படம் தான்.
இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கும் ஆறு படங்கள்
ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படம் செப்டம்பர் 5 திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் கூட்டணியில் உருவாகி வருகிறது LIK படம். இந்த படமும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியாகிறது.
அடுத்ததாக தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் இட்லி கடை. இந்த படம் அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அக்டோபர் 14ஆம் தேதி இரண்டு படங்கள் போட்டி போடுகிறது.
ஒன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் படம். இந்த படத்தோடு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் டியூட் படம் வெளியாகிறது. ஆகையால் இந்த ஆறு படங்களில் எது வெற்றிவாகை சூடுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.