உருவத்திலும், நடிப்பிலும் ஒற்றுமையாக இருக்கும் நடிகர்கள்.. எஸ் ஜே சூர்யாவை ஜெராக்ஸ் எடுத்த வில்லன் நடிகர்

தமிழ் திரை உலகில் ஒரு இயக்குனராக தன் பயணத்தை ஆரம்பித்த எஸ் ஜே சூர்யா இப்போது ஹீரோ, வில்லன் என்று பல பரிமாணங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அஜித்தின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த வாலி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படம் இவரை முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் சேர்த்தது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படி பரபரப்பாக இருந்த இவர் நியூ திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். அதிலும் மெர்சல் திரைப்படத்தின் இவருடைய வில்லத்தனம் யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் இப்போது அவர் தமிழ், தெலுங்கு என்ற ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் பாடல்கள் எழுவது, பாட்டு பாடுவது என்று பல திறமைகள் கொண்டவர். இப்படி அனைத்து துறைகளிலும் திறமையானவராக இருக்கும் இவரை போன்றே உருவத்திலும், நடிப்பிலும் மிரட்டும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நவாசுதீன் சித்திக் தான்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். அச்சு அசல் எஸ் ஜே சூர்யா போல் இருக்கும் இவர் உருவத்தை போல் நடிப்பிலும் அவரைப் போன்று கலக்கிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான நடிப்பு திறன் கொண்டவர்கள் தான்.

இவரை பார்க்கும்போது கூட அப்படியே எஸ் ஜே சூர்யாவை ஜெராக்ஸ் எடுத்தது போன்ற இருப்பார். பல வருடங்களாக திரையுலகில் பிசியாக வலம் வரும் இவர்கள் இருவரும் இப்போதும் கூட கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட சினிமா நட்சத்திரங்களில் இவர்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.