இயக்குனராக மக்களுக்கு அறிமுகமான எஸ் ஜே சூர்யா பிறகு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு முன்பு இவர் நியூ என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்தார். அதுவரை இயக்குனராக இருந்த அவர் அந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் அஜித் தான் நடிக்க இருந்தார். அவரை வைத்து போட்டோ சூட் எல்லாம் நடத்தப்பட்டது.
ஆனால் சில தடங்கல்களின் காரணமாக அந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவே நடித்தார். அந்தப் படத்தில் பல இடங்களில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காட்சிகள் இருந்தது. அதை சுட்டிக்காட்டிய சென்சார் போர்டு படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்க மறுத்தது.
அப்போது நடந்த விவாதத்தில் எஸ் ஜே சூர்யா சென்சார் குழுவில் இருந்த பெண் அதிகாரியின் மீது மொபைல் ஃபோனை தூக்கி எறிந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் எஸ் ஜே சூர்யாவின் மீது வழக்குப் பதியப்பட்டு அவர் சிறைக்கு சென்றார்.
அதன் பிறகு எப்படியோ அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் வந்தார். பின்னர் படம் வெளியாகி பல பிரச்சனைகளை சந்தித்தது. இப்படி மோசமான காட்சிகளை உள்ளடக்கி வெளிவந்த அந்த திரைப்படத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியது.
அதுமட்டுமல்லாமல் படத்தின் போஸ்டரை பார்த்த சமூக ஆர்வலர்கள் எஸ் ஜே சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தனர். இதற்காகவும் அவர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்து அவர் எப்படியோ தப்பித்தார். இப்படி ஒரே படத்திற்காக இரண்டு முறை கோர்ட்டுக்கு சென்ற எஸ் ஜே சூர்யா அதன் பிறகு சற்று கவனத்துடன் படங்களை இயக்க ஆரம்பித்தார்.