வெப் சீரிஸ் நடிக்க களமிறங்கும் பிரபல நடிகர்.. தயாரிக்கும் விக்ரம் வேதா படக்குழு

விக்ரம் வேதா படத்தை அடுத்து திரைத்துறையில் பிரபலமானவர்கள் புஷ்கர்-காயத்ரி தம்பதி. மாதவன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாறுபட்ட பல்வேறு கதைகளை ஒன்றிணைத்து மாஸாக வெளிவந்த படம் விக்ரம் வேதா.

இந்த படத்தை இயக்கிய தம்பதி இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளது. குஷி வாலி படங்களின் இயக்குனரும் வியாபாரி நியூ படங்களின் நாயகனுமான எஸ்.ஜே.சூர்யா சமீப காலமாக சில படஙகளில் தோன்றி வருகிறார்.

வெகு நாட்களாக படவாய்ப்பு இல்லாத எஸ்.ஜே வுக்கு நல்ல கம் பேக்கை கொடுத்தது “இறைவி” படம். இதனையடுத்து வில்லன் குணச்சித்திரம் என எந்த கேரக்டர் எடுத்தாலும் டைரக்டர் பிரித்தாளுகிறார்.

சமீபத்தில் வெளியான பொம்மை படத்தின் பர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்ப மாநாடு டான் படங்களை தொடர்ந்து கொலைகாரன் பட இயக்குனர் இயக்கும் ஒரு வெப் சீரியஸில் நடிக்க உள்ளார் எஸ்.ஜே.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கிய நிலையில் நல்ல திரில்லிங் லவ் சப்ஜெக்டாக அமையும் இந்த வெப் சீரியஸ் என்று பேசப்படுகிறது. அமேசான் ப்ரைமில் இந்த வெப் சீரியஸ் ஒளிபரப்பாக விருக்கிறது.