என்னோட அடுத்த படம்.. டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு குட் நியூஸ் சொன்ன எஸ் ஜே சூர்யா

SJ.Suryah: எஸ் ஜே சூர்யா இப்போது ஹீரோ வில்லன் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் கைவசம் இந்தியன் 3, சர்தார் 2 வீரதீர சூரன், கேம் சேஞ்சர் என பல படங்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து அவருடைய அடுத்த படம் பற்றிய அப்டேட்டும் வெளிவந்துள்ளது.

அதன்படி எஸ் ஜே சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் நேற்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த நிகழ்வில் அவர் பங்கேற்றபோது செய்தியாளர்கள் அவரிடம் அடுத்த படம் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது அவர் மீண்டும் தான் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்படம் நியூ பட பாணியில் இருக்கும் என்றும் கில்லர் என பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மீண்டும் இயக்குனரான எஸ் ஜே சூர்யா

அதுமட்டுமின்றி கேம் சேஞ்சர் படம் வெளியான பிறகு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். ஜனவரி மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என மொத்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த செய்தி மீடியாவில் கசிந்திருந்தது. அதே போல் இப்படம் பான் இந்தியா ஸ்டைலில் உருவாகும் என்றும் இதற்காக வெளிநாட்டில் இருந்து எஸ் ஜே சூர்யா ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்து இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

அதையும் எஸ் ஜே சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்து இருக்கிறார். ஆக மொத்தம் நடிப்பில் பிஸியாக இருந்த நடிப்பு அரக்கன் தற்போது மீண்டும் இயக்குனராகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது.

அது மட்டும் இன்றி அவர் இயக்கப் போகும் கில்லர் படத்தை அவரே தயாரித்து நடிக்கப் போகிறார். இதன் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரத்தை தெரிந்து கொள்வதற்கு நாம் ஜனவரி மாதம் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

Leave a Comment