Sivakarthikeyan : தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்து தனது கடின உழைப்பால் பல ரசிகர்களை சம்பாரித்து தற்போது விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.
மெரினா திரைப்படத்தில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இயக்குனர்கள் தேடும் ஹீரோவாக மாறி இருக்கிறார். அமரன் திரைப்படத்தில் முகுந்தன் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு, மக்களின் மத்தியில் பயங்கரமான வரவேற்பை கொடுத்தது.
இதற்கு முன்பே கோட் திரைப்படத்தில் விஜய் சிவகார்த்திகேயன் கையில் கொடுத்த துப்பாக்கி சீன் வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியது. அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று மீம்ஸ் வலைதளத்தில் வைரலானது.
விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்..
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான திரைப்படம் “பராசக்தி“. 1952-இல் சிவாஜி கணேசன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியானது. சிவாஜி கணேசனின் அந்த இடம் தற்போது சிவகார்த்திகேயன் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான சுதா கொங்காரா சிவகார்த்திகேயனை பற்றி பேசியது வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த விஜயின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
” சிவகார்த்திகேயன் நேர்மையான நடிகர், அவரை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பையனை பார்ப்பது மாதிரி தோணும். அதே மாதிரி தான் அந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அவர் எனக்கு மிகவும் பிடிக்கும்”. இப்படி சுதா கொங்காரா பேசியது, “அப்படி என்றால் விஜய் இந்த மாதிரி இல்லையா?”, என்று விஜயின் ரசிகர்களுக்கு கடுப்பைக் கிளப்பியுள்ளது