நயன்தாராவே பட்டம் வேணாம்னு சொல்லிட்டாங்க.. என்னை அப்படி கூப்பிடாதீங்க, சின்னத்திரை நடிகையின் ரெக்வெஸ்ட்

Nayanthara: நம்பர் ஒன் நடிகையாக இருந்த நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று படங்களின் டைட்டிலில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அவரது ரசிகர்களும் அப்படியே கொண்டாடி வந்த நிலையில் சமீபத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம், நயன்தாரா என்று அழைத்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். இது ஒரு புறம் இணையத்தில் ட்ரோலாகவும் மாறி இருந்தது

இப்போது நயன்தாராவே பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்னை யாரும் அப்படி கூப்பிடாதீர்கள் என்ற சின்னத்திரை நடிகை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நயன்தாரா போல் பட்டம் வேண்டாம் என்று கூறிய சின்னத்திரை நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. அழகும், நிறமும் திறமைக்கு தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டியவர் தான் இவர்.

சாதாரணமாக மேடைப்பேச்சியில் தொடங்கிய இவரது பயணம் சின்னத்திரை தொகுப்பாளினியாக மாறினார். அதன் பிறகு சின்னத்திரை தொடர்கள், வெள்ளித்திரை படங்களிலும் அறந்தாங்கி நிஷா கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவரை பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று கிண்டல் அடித்து வந்தனர். ஆனால் அதை பெரிதும் அறந்தாங்கி நிஷா கண்டு கொள்ளவில்லை. தன்னுடைய வேலை மீது நம்பிக்கை வைத்து ஓடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷா கூறுகையில் நயன்தாராவே லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். என்னையும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment