அந்த ஒரு இரவு பார்ட்டி தான் என் வாழ்க்கையை மாற்றியது.. ஒளிவு மறைவில்லாமல் பேசிய சினேகா

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் இன்றும் ஒரு சில நடிகைகளை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவர்கள் உச்ச நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் கூட அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

அப்படிப்பட்ட நடிகைதான் சினேகா. தன்னுடைய புன்னகையால் அனைவரையும் கவர்ந்தவர். இதன் காரணமாக ரசிகர்கள் அவரை புன்னகை அரசி என செல்லமாக அழைத்து வந்தனர். சினேகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை.

அவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவு அவரது நடிப்புக்கு அச்சாரம் போடவில்லை. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட கதாநாயகியாக படங்களில் நடித்தார். இதன் காரணமாகவே ஒரு சில முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

அப்படி இருந்தும் தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகையானார். தன்னுடைய கேரியர் இறுதி கட்டத்தை அடைந்ததை உணர்ந்த சினேகா உடன் நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு இரவுதான் என் வாழ்க்கையை மாற்றியது என்று கூறியது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அது ஒன்றும் இல்லை, ஒருமுறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றாராம். அப்போது சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்களாம்.

ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. இருந்தாலும் அடுத்ததாக தமிழில் வெளியான விரும்புகிறேன் படம் எனக்கு ஒரு நல்ல அடையாளமாக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த இரவு அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் இன்று எனக்கு சினிமா வாழ்க்கையை கிடையாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

sneha-cinemapettai-01
sneha-cinemapettai-01