காலம் கடந்து கொண்டாடப்படும் படங்களில் பெரும்பாலும் செல்வராகவன் இயக்கிய படங்கள் தான் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் அவரது படங்களை புரிந்து கொள்ளாத ரசிகர்கள் காலம் கடந்து வாவ், சூப்பர், ஜீனியஸ் என கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் காலம் கடந்து தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்தன.
புதுப்பேட்டை படம் தனுஷ் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷலான படம். தனுசை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய திரைப்படங்களில் இந்த படத்திற்கு பெரிய பங்கு உண்டு.
புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நடித்திருந்தனர். இதில் சினேகா விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் அரசியல்வாதியும் சினிமா நடிகையுமான காயத்ரி ரகுராம் தான். இவர் சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
போட்டோ ஷூட் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு புதுப்பேட்டை திரைப்படம் ஆறு மாதம் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியதால் அந்த படத்திலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதாக குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சரியான நபர் இவர் இல்லை என நேரடியாக சொல்ல முடியாததால் படப்பிடிப்பை காரணம் காட்டி நீக்கி விட்டதாக ஒரு தகவல் உள்ளது.
