சமீபத்தில் வெளியாகி இளசுகளின் மனதைக் கவர்ந்த படம் லவ் டுடே. ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்நிலையில் சுந்தர் சி யின் காபி வித் காதல் படத்திற்கு போட்டியாக லவ் டுடே படம் வெளியானது.
ஆனால் ஒரு பெரிய இயக்குனரான சுந்தர் சி யின் படத்திற்கு கிடைக்காத வரவேற்பு இளம் இயக்குனர் பிரதீப்புக்கு கிடைத்துள்ளது. இப்போது உள்ள காதல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக இந்த படம் காட்டியிருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு இப்படம் தவறான கருத்தை தான் கற்பிக்கிறது.
ஆனால் படத்தை நகைச்சுவையுடன் அழகான திரைக்கதை அமைத்துள்ளதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தற்போது அதிக திரையரங்குகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக லவ் டுடே படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. முதல் நாளில் மூன்று கோடி வசூல் செய்தது. அதன் பின்பு படத்திற்கு கிடைத்த விமர்சனத்தினால் மக்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. ஆகையால் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து நாட்களிலேயே 20 கோடி வசூலை அள்ளியது.
இந்நிலையில் நேற்றுடன் பத்து நாளை நெருங்கிய நிலையில் 50 கோடி கிளப்பில் லவ் டுடே படம் இணைந்துள்ளது. ஒரு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் டஃப் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இப்போதும் திரையரங்குகளில் லவ் டுடே படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
இதனால் மிக குறுகிய நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் லவ் டுடே படம் இணையும் என பிரதீப் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்த பிரதீப்புக்கு அடுத்தடுத்த பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதாம்.