2016-ல விஜய்-யின் தவெக கட்சி பற்றிய கேள்வி.. சூரி சொன்ன தக் லைப் பதில்

‘தக் லைஃப்’ படம் மிக பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கத்தில் நடந்து முடிந்துள்ளது. பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் பொழுது அதற்கான விளம்பர வேலைகளை மணிரத்னம் தொடங்கி விட்டார்.

கூடவே கமலஹாசனும் இந்த படத்தில் பணம் போட்டிருப்பதால் அவரும் நடக்கிற எல்லா விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் டிரைலர் நன்றாக வைரலானது.

ஆனால் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஜில்லா படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாக பரப்பி வருகின்றனர். மோகன்லால் கதாபாத்திரத்தில் கமலஹாசனையும் விஜய் கதாபாத்திரத்தில் சிம்புவையும் சேர்த்து வைத்து கதை கட்டி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் சொல்வது போலவே படத்தின் காட்சிகளும் அமைந்துள்ளன. இந்த படம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளி வருகிறது. படம் வெளிவந்த பின்புதான் இதெல்லாம் உண்மையா என்பது தெரியவரும்.

கமலஹாசன் எழுதிய பழைய கதைதான் தக் லைஃப். அதற்கு பட்டி டிங்கரிங் பார்த்து மணிரத்னம் படமாக எடுத்து உள்ளாராம். இதனை கமலஹாசனே ஒரு பேட்டியில் கூறினார்.