அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் சூரி.. விடுதலை முதல் மண்டாடி வரை

Soori : சூரி, சிவகார்த்திகேயனுடன் நடித்த காமெடிகள் ரசிகர்களால் கவரப்பட்டது. அதன் பிறகு அவர் சினிமாவில் அடுத்த அடுத்த கட்டத்தில் முன்னேறி கதாநாயகனாக நடித்தார். அவரை வேறு பரிமாணத்தில் காட்டியது வெற்றிமாறன் தான்.

விடுதலை என்ற அற்புதமான படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கருடன் படத்தை தேர்ந்தெடுத்து சூரி நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சேவலை மையமாக வைத்து கொட்டுகாளி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் ஹிட் அடித்தது. இப்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி

தாய்மாமன் உறவை வெளிப்படுத்தும்படி எடுக்கப்பட்டிருந்தது. ஒரு பாச போராட்டத்துடன் உருவான இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்ததாக சூரி நடித்து வரும் படம் தான் மண்டாடி.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தான் சூரி ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸானார்.

அதேபோல் மண்டாடி படமும் நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது. இவ்வாறு சூரி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி கொடுத்து சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ‌