வெற்றிமாறனுக்கு பட்டை அடிக்கும் விஜய் சேதுபதி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் முன்னணி ஹீரோ

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சிக்கலுக்கு விஜய்சேதுபதி தான் காரணம் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். மார்ச் மாதத்தில் படம் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருந்தனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் தான் படத்தின் திருப்புமுனை என பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருவதால் கமிட்டான ஒரு சில படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறி வருகின்றனர்.

அதாவது சூரி விடுதலை படத்தினை மார்ச் மாசம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் சொன்னபடி அனைத்து நடிகர்களையும் படத்தில் நடிக்க வைத்து வரும் படக்குழு விஜய் சேதுபதியால் மட்டும் காலதாமதம் ஏற்படுவதாக கூறி உள்ளனர்.

அதுவும் விஜய் சேதுபதி கண்டிப்பாக நடிக்கிறேன் கொஞ்ச நாள் டைம் கொடுங்கள் எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் சூரி படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என கூறிவருகின்றனர். மேலும் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகர்களின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் விஜய் சேதுபதி அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கி உள்ள சூரி இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றார். ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால் விழிபிதுங்கி உள்ளாராம் நம்ம ஹீரோ.