Soori-Maaman: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதை எழுதி ஹீரோவாக நடித்துள்ள மாமன் இன்று வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து சுவாசிகா, ராஜ்கிரண் என முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர். தாய்மாமனுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் பாசத்தையும் பற்றி அலசுகிறது இப்படம்.
ஏற்கனவே ட்ரைலர் சென்டிமென்ட், எதார்த்தம், காமெடி என கலவையாக இருந்தது. அதேபோல் படம் குறித்து மேடையில் பேசிய சூரி தான் கடந்து வந்த பாதை பற்றி கண்கலங்கி பேசியிருந்தார்.
ஹீரோவாக சூரிக்கு கிடைத்த அங்கீகாரம்
இப்படி ரிலீசுக்கு முன்பே மாமன் கவனிக்கப்பட்ட நிலையில் இன்று பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் விசில் சத்தம் காதை பிளக்கிறது.
விடுதலை மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த சூரி அடுத்ததாக கருடன், கொட்டுக்காளி என வெரைட்டி காட்டி நடித்திருந்தார். அந்த வரிசையில் மாமன் படத்தில் அவர் முற்றிலும் வேறு ஒரு அவதாரத்தில் இருக்கிறார்.
படத்திற்கு படம் அவருடைய புது பரிமாணம் வியக்க வைக்கிறது. அது மட்டும் இன்றி அவரை ஆடியன்ஸ் முழுமையாக ஹீரோவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதற்கு இப்படமே ஒரு சாட்சி.
இப்படியாக முந்தைய படங்களின் பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்டில் மாமன் இணைந்துள்ளது. இதன் மூலம் சூரி காமெடியன் என்ற பிம்பத்தில் இருந்து ஹீரோவாக முழு அங்கீகாரம் பெற்றுள்ளார்.