வியாபாரமான சூரியின் மாமன்.. பெரும் தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்

Soori : சூரி இப்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். விடுதலை படம் தொடங்கி கொட்டுக்காளி, கருடன் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் மாமன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

கடைக்குட்டி சிங்கம் படம் போல கிராமம் கதை சார்ந்து பாசம் போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தனது அக்கா மகனை கருவில் இருக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்கிறார் சூரி.

வியாபாரமான சூரியின் மாமன் படம்

பிறந்த பிறகு முதலில் கையில் வாங்கும் சூரி பாராட்டி, சீராட்டி வளக்கிறார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக அக்கா மகனை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் மாமன் படத்தின் கதை.

இப்படத்தில் மிகவும் எதார்த்தமாக சூரி நடித்திருக்கிறார். இந்த சூழலில் மாமன் படத்தின் ஓடிடி உரிமையை ஜி5 மற்றும் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றிருக்கிறது. பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மாமன் படம் வருகின்ற மே 16ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ஆகையால் தியேட்டரில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.