விஜய் சேதுபதியுடன் நடிப்பை தொடங்கி, முதல் படத்திலேயே பிணமாக நடித்த நடிகர்.. தற்போது இருக்கும் பரிதாப நிலை

சினிமா துறையில் விஜய் சேதுபதியுடன் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஒரு நடிகர் தற்பொழுது வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளார். அந்த அளவுக்கு இவருடைய சினிமா வாழ்வில் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. தொடர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற இவருக்கு சினிமாவில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவருடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட் வரை எட்டாத உயரத்திற்கு சென்று விட்டார். ஆனால் இந்த நடிகர் இன்னும் அதல பாதாளத்திலேயே இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் சேதுபதியுடன் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்னும் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹா தான்.

Also read: மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா 2, சாமி 2 போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். தற்பொழுது இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்துள்ள படம் வல்லவனுக்கு வல்லவன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படம் கிணற்றில் போட்ட கல்லு போல் வெளியாகாமல் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் சத்தமே இல்லாமல் வெளியாகி உள்ளது. இவ்வாறாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு வெள்ளி திரையில் கால் பதித்த பாபி சிம்ஹா ஒரு சில படங்களில் மட்டுமே அதனை நிறைவேற்றினார்.

Also read: 2022 ஆம் ஆண்டின் சிறந்த 5 வில்லன்கள்.. கடைசியா 5 நிமிடம் வந்தாலும் முதல் இடத்தைப் பிடித்த ரோலக்ஸ்

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு லக்கு இல்லாமல் பின்னடைவை சந்தித்தார். பிறகு வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா துறையில் ஒரு ரவுண்டு வந்து வளர்ந்து வரும் நடிகர்களுக்கு நிகராக ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக இப்பொழுது எந்த ஒரு பட வாய்ப்புகளும் கைவசம் இல்லாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது போல் காணப்படுகிறார். இந்நிலையில் ரசிகர்கள் இவருக்கா இந்த நிலை என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த வருடமாவது இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Also read: அக்கட தேசத்து விஜய் சேதுபதி இவர்தான்.. கமலே கூப்பிட்டு பாராட்டிய ஹீரோ