விஜய்க்கு எதிராக எழும் கடும் எதிர்ப்பு.. அரசியல் என்ட்ரியால் மொத்த ரசிகர் மன்றமும் கலைப்பு

Strong opposition against Vijay due to political entry: விஜய் அரசியலுக்கு வருவாரா அல்லது ரஜினி மாதிரி அறிக்கை விட்டதோடு சரி, ஏதாவது காரணங்களை சொல்லி திரும்ப நடிப்பதற்கே போய்விடுவாரா என்ற ஒரு சில சந்தேகங்கள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தீர்க்கும் விதமாக விஜய் அரசியலில் முழு மனதுடன் இறங்கி அதற்கான தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரையும் அறிவித்துவிட்டார்.

அத்துடன் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கான வேலைகளை கமுக்கமாக ஒரு பக்கம் நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இது சம்பந்தமான படங்களில் கடைசியாக நடித்து முடித்து விட வேண்டும் என்று அதற்கும் அஸ்திவாரத்தை போட்டு வருகிறார். அரசியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவசர அவசரமாக ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் அரசியலில் இறங்கியதால் இனி அவரை ஒரு நடிகராக பெரிய திரையில் பார்க்க முடியாது என்ற ஏக்கமும் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் இவருக்கு அளவு கடந்த ரசிகர்கள் கேரளாவில் இருக்கிறார்கள். ஆனால் தற்போது அந்த ரசிகர்கள் விஜய் அரசியலில் குதித்ததால் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றமாக இருக்கிறது.

காரணம் ஒரு நடிகராக மட்டும்தான் நாங்கள் அவருக்கு ரசிகர்களாக இருப்போம் தவிர கட்சி அரசியல்வாதிகளாக யாருமே சப்போர்ட் பண்ண மாட்டோம் என்று ஒரு எதிர்ப்பு குரல் எழும்பி வருகிறது. இந்த ஒரு விஷயத்தில் அங்குள்ள மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் நடிப்பதற்கு மட்டுமே தான். அரசியலுக்கு அவர்கள் செட்டாக மாட்டார்கள் என்ற மன நிலைமையில் இருக்கிறார்கள்.

அதனால் தான் மம்முட்டி மற்றும் மோகன் லால் அரசியலுக்கு வந்தாலும் சப்போர்ட்டை கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக புரிய வைத்திருக்கிறார்கள். இதனால் தான் அவர்களும் அங்கே அரசியலில் ஈடுபடாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் முழுக்க முழுக்க அவர்கள் சப்போர்ட்டாக இருப்பது மாநிலக் கட்சிக்கு மட்டும்தான் அகில இந்திய கட்சிக்கு கிடையாது.

இதுல வேற விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்று கட்சி பெயரை சொல்லியதால் கேரள மக்கள் யாருமே சப்போர்ட் பண்ண மாட்டோம் என்று ரசிகர் மன்றத்தையே கலைக்கும் அளவிற்கு போய்விட்டார்கள். ஆனாலும் விஜய் இதையெல்லாம் பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அவருக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவு மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் துணிந்து அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்.